இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டசபை தேர்தலில், பொது மக்கள் பங்கேற்பை அதிகரிக்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில அளவில், இணையவழி வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியின் அனைத்து சுற்றுகளும், 'goal Quiz sports' என்ற, 'யு டியூப்' இணையவழி தளத்தில் நடத்தப்படும்.விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக, முதல் நிலை போட்டியில் கலந்து கொள்ளலாம். முதல் நிலை போட்டி, மூன்று சுற்றுக்கள் உடையது.முதல் சுற்று, 25ம் தேதி மாலை, 4:00 மணி; இரண்டாம் சுற்று, 26 காலை, 11:00 மணி; மூன்றாம் சுற்று, அன்று மாலை, 4:00 மணிக்கு நடத்தப்படும்.முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன