கடந்த ஆண்டை விட குறைந்த நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை


  

கொரோனா காலத்தில் நீட் தேர்வுகளை நடத்தியதால், விருப்பம் அதிகரித்தும் தேர்வை எழுத முடியாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது நீட் புள்ளிவிபரங்கள் வழியாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 15,97,435 ஆகும். இது கடந்த ஆண்டு வந்த 15,19,375 விண்ணப்பங்களை விட 5.14% அதிகம் ஆகும். இதில் மாற்றுப்பாலினத்தவர் ஒருவர் உட்பட 56.4% (7,71,500) தேர்ச்சியடைந்துள்ளார்கள். ஆண்கள் 3,43,556. பெண்கள் 4,27,943.

இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 25,542 பேர் குறைவாகும். கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 14.1 லட்சம் பேர்களில் 7,97,042 தேர்வானார்கள்

கருத்துகள்